தற்போதைய செய்திகள்

வானில் தோன்றிய ரத்த சிவப்பு நிலா

26th May 2021 08:04 PM

ADVERTISEMENT

இந்த வருடத்தின் முதல் சந்திரகிரகணத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் கண்டுகளித்தனர்.

இந்தியாவில் வட கிழக்கு பகுதிகள் (சிக்கிம் தவிா்த்து), மேற்கு வங்கத்தின் ஒரு சில இடங்கள், ஒடிஸா மற்றும் அந்தமான் நிக்கோபாா் தீவுகளின் சில கடற்கரைப் பகுதிகளில் சந்திர உதயத்திற்குப் பிறகு, சந்திர கிரகணம், குறுகிய காலத்திற்கு தெரிய உள்ளதாக இந்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரகணம்  6:23 மணிக்கு நிறைவடைந்தது. எனினும் குறிப்பிட்ட பகுதிகளில் நிலவிய மேகமூட்டம் காரணமாக சந்திரகிரகணத்தைக் காண மக்கள் சிரமப்பட்டனர்.

இந்தியாவைத் தவிர்த்து தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அண்டாா்டிகா, பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடலை ஒட்டிய இடங்களில்  சந்திர கிரகணம் தெரிந்தது.

ADVERTISEMENT

 

அடுத்த சந்திர கிரகணம், 2021, நவம்பா் 19 அன்று இந்தியாவில் தெரியும். அது, பகுதி சந்திர கிரகணமாக நிகழும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT