தற்போதைய செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய தமிழக முதல்வர் வாழ்த்து

19th May 2021 05:11 PM

ADVERTISEMENT

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக, அதிகாலை 3:30 மணியளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடா்ந்து அவரது உடல்நிலையை மருத்துவா்கள் கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

 

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர், “மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் முழு உடல்நலன் பெற்று தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT