தற்போதைய செய்திகள்

மநீம முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

10th Mar 2021 07:35 PM

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை புதன்கிழமை கமல்ஹாசன் வெளியிட்டார்.

நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிர காட்டி வருகின்றன. 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் புதன்கிழமை வெளியிட்டார். 

அதில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் பொன்ராஜ் அண்ணாநகர் தொகுதியிலும், விருகம்பாக்கம் தொகுதியில் கவிஞர் சினேகனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT