தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 8 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது

20th Jun 2021 08:54 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாட்டில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 8 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது. தமிழகத்தில் 30-ஆவது நாளாக தினசரி கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,817 பேருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதித்தோரின் மொத்தம் எண்ணிக்கை 24,22,497 -ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து 17,043 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 23,21,928 ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

தமிழகத்தில் தொற்று பாதிப்புக்கு ஞாயிற்றுக்கிழமை மேலும் 182 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் 76 பேரும், அரசு மருத்துவமனைகளில் 106 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 31,197 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாவது நாளாக கரோனா தொற்று உயிரிழப்பு 200க்கும் கீழ் குறைந்துள்ளது. 

கோவையில் 1,000-க்கும் கீழ் குறைந்தது. அதிகபட்சமாக கோவையில் - 904, ஈரோடு-870, சேலம்-517, திருப்பூர்-47, தஞ்சை-370, செங்கல்பட்டு -328, நாமக்கல்-327, திருச்சி-263, திருவண்ணாமலை-206, திருவள்ளூர்-204, கடலூர் -197, நீலகிரி - 175, கிருஷ்ணகிரி - 170, கள்ளக்குறிச்சி - 166, மதுரை -151, ராணிப்பேட்டை -145, குமரி - 140, நாகைப்பட்டினம் - 135, தருமபுரி - 129, விழுப்புரம் - 126 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 3,11,69,341 பேரிடம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,72,542 பேரிடம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, தமிழகத்தில் 69,372 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் தொற்று பாதித்தவர்களில் 14,17,026 பேர் ஆண்கள், 10,05,433 பேர் பெண்கள். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 4,305 பேர் ஆண்கள், 3,512 பேர் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 38 திருநங்கைகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 455 பேர் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,29,211 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT