தற்போதைய செய்திகள்

திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

19th Jun 2021 09:24 AM

ADVERTISEMENT

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகேயுள்ள பாப்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தியைசாமி மகன் ராமராஜன் (25), திருமணமாகாத இவர் சென்னையில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

தனது சகோதரி கணவர் இறப்பு சம்பவத்திற்கு பாப்பாகுடி கிராமத்திற்கு வந்த ராமராஜன் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையே சனிக்கிழமை அதிகாலை பாப்பாகுடி பிள்ளையார்கோவில் ஊரணி அருகே ராமராஜன் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து பூவந்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 அதன்பின் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமராஜன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ராமராஜன் எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார் என்பது குறித்து பூவந்தி போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Tags : Youth murder Tiruppuvanam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT