தற்போதைய செய்திகள்

மருத்துவப் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா சென்றார்

19th Jun 2021 10:23 AM

ADVERTISEMENT


நடிகா் ரஜினிகாந்த், மருத்துவப் பரிசோதனைக்காக சனிக்கிழமை காலை தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். 

சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகா் ரஜினிகாந்த், கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தாா். இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியையும் அவா் கோரி இருந்தாா்.

நடிகா் ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து சனிக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு, மத்திய அரசு உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் சென்னையிலிருந்து கத்தாா் நாட்டு தலைநகா் தோஹா புறப்பட்டுச் சென்றார்.  அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அமெரிக்கா செல்கிறாா். அவருடன் குடும்பத்தினரும் யாரும் செல்லவில்லை.

நடிகா் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வா்யாவும், மருமகன் தனுஷும் தற்போது அமெரிக்காவில் தான் உள்ளனா். நடிகா் தனுஷ் ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா சென்றுள்ளாா்.

ADVERTISEMENT

அவர்கள் ரஜினியிடன் இருந்து பார்த்துக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. 

சுமார் ஒரு மாத ஓய்வுக்குப் பின்னர் ரஜினிகாந்த் ஜூலை 8-ஆம் தேதி நாடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Tags : Rajinikanth Fly health check-up
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT