தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரம் பட்டு கூட்டுறவு சங்க மேலாளர் தூக்கிட்டு தற்கொலை

19th Jun 2021 07:26 PM

ADVERTISEMENT


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பட்டு கூட்டுறவு சங்கத் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விஷ்ணுகாஞ்சி போலீஸார் இன்று (சனிக்கிழமை) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் நகர் சின்னக்காஞ்சிபுரம் சித்தி விநாயகர் கோயில் பூந்தோட்டம் தெருவில் வசித்து வருபவர் முனியப்பன்(58). இவர் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள டாக்டர்.கலைஞர்.கருணாநிதி பட்டு கூட்டுறவு சங்கத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இன்று (சனிக்கிழமை) வழக்கம் போல பணிக்கு வந்த முனியப்பன் அலுவலகத்தின் 2 வது மாடிக்கு சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

பணி மேற்கொள்ள சங்க துப்புரவுப்பணியாளர் மாடிக்கு சென்ற போது அவர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்தத் தகவலை விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து ஆய்வாளர் சுந்தர்ராஜன், சார்பு ஆய்வாளர் தாமோதரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

குடும்பத்தகராறு மற்றும் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

Tags : தற்கொலை சங்க மேலாளர் பட்டு கூட்டுறவு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT