தற்போதைய செய்திகள்

வயதுவந்தோரில் 5% பேருக்கே இதுவரை தடுப்பூசி!

19th Jun 2021 10:35 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாட்டில் தடுப்பூசி செலுத்தத் தொடங்கி 5 மாதங்களானபோதிலும் இதுவரை  வயதுவந்தோரில் சுமார் 5 சதவிகித மக்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்களின்படி, இதுவரை நாட்டில் 5.03 கோடி பேருக்கு மட்டுமே இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டிருக்கிறது. நாட்டின் மக்கள்தொகையில் வயது  வந்தோரின் எண்ணிக்கை 94 கோடிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

இதையும் படிக்கலாமே.. சென்னையில் பயன்பாட்டுக்கு வந்தது ஸ்புட்னிக் தடுப்பூசி: அப்பல்லோவில் ரூ.1,145-க்கு செலுத்தப்படுகிறது

ஒரு தவணை மட்டும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கையையும் சேர்த்தால் 27.07 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இது நாட்டின் வயது வந்தோரின் மொத்த எண்ணிக்கையில் சுமார் நான்கில் ஒரு பங்கு.

ADVERTISEMENT

உலகளவில் மக்களுக்கு முழுவதும் தடுப்பூசி செலுத்திய நாடுகளில் ஏறத்தாழ 80 நாடுகள், இந்தியாவைவிட முன்னிலையில் இருக்கின்றன.

நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் சராசரியாக ஒரு நாளில் 30.57 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. ஜூன் 14 முதல் தடுப்பூசி செலுத்தப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துவருவது கவலையளிப்பதாக மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் தடுப்பூசி செலுத்துவோரின் சராசரி அளவு, ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட மே மாதத்தில் 40 சதவிகிதம் குறைவு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனோ நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க நாட்டில் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

Tags : coronavirus COVID-19 vaccination
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT