தற்போதைய செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

29th Jul 2021 10:22 AM

ADVERTISEMENT

 

ஓசூர்: ஒசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெயச்சந்திரன் பானு ரெட்டி, ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷ் கதவணை வழியாக தண்ணீர் திறந்து வைத்தனர்.

கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் கெலவரப்பள்ளி, தொரப்பள்ளிஉத்தனப்பள்ளி உள்ளிட்ட 100 கிராமங்ளுக்குள்பட்ட 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்ற கூறப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். 

ADVERTISEMENT

கெலவரப்பள்ளி அணையின் கதவணை மலர்தூவி திறந்து வைத்த ஆட்சியர் டாக்டர் ஜெயச்சந்திரன் பானு ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷ்.

இதில் மாநகர பொறுப்பாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஏ.சத்யா, ஒன்றிய செயலாளர் சின்னபில்லப்பா, சார்ஆட்சியர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தியாகராஜன், ஹரிஷ், கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT