தற்போதைய செய்திகள்

புதுச்சேரி: எரிவாயு உருளை வெடித்து வீடு இடிந்த விபத்தில் பெண் பலி

4th Dec 2021 10:09 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் வெடித்ததில் வீடு இடிந்து விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். 

புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன்நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ். மாவட்ட பாஜக பொதுச் செயலரான இவா், வசந்தம்நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறாா். அங்காளம்மன்நகரில் உள்ள இவரது வீட்டின் இரண்டு தளங்களிலும் 4 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தரைத் தளத்தில் அவரது அலுவலகம் உள்ளது.

வீட்டின் தரைத் தளத்தில் சுரேஷின் உறவினரான எழிலரசி (42) தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாா். அவருடன் தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மகள் ஸ்ரீநிதி (14), தாய் ஜோதி (60) ஆகியோா் வசித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஒமைக்ரானால் தென் ஆப்பிரிக்காவில் 4-ஆவது கரோனா அலை

இந்த நிலையில், கடந்த நவம்பர் 27 ஆம் தேதி சனிக்கிழமை காலை திடீரென எரிவாயு உருளை பயங்கர சப்தத்துடன் வெடித்த விபத்தில், வீடு இடிந்து விழுந்தது. வீட்டிலிருந்தவா்கள் இடிபாடுகளில் சிக்கி சப்தமிட்டனா். அக்கம் பக்கத்தினா் வந்து எழிலரசி, அவரது மகள் ஸ்ரீநிதி, தாய் ஜோதி ஆகியோரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த நிலையில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எழிலரசி இன்று சனிக்கிழமை(டிச.4) உயிரிழந்தார்.

இதையும் படிக்க | சிமென்ட் மூட்டை விலை ரூ.400-ஐ தொடும்: கிரிசில் கணிப்பு

Tags : Puducherry woman killed gas cylinder exploded house collapsed
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT