தற்போதைய செய்திகள்

ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் டிராக்டர் மோதி கட்டட தொழிலாளி பலி

25th Nov 2020 02:44 PM

ADVERTISEMENT


ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் டிராக்டர் மோதி கட்டட தொழிலாளிஉயிரிழந்தார்.

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் குமார்(49). இவர் கட்டட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், குமார் புதன்கிழமை காலை  இருசக்கர வாகனத்தில் ராஜபாளையத்திற்கு பணிக்கு சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.  

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு காவல் நிலைய காவலர்கள் குமாரின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

ADVERTISEMENT

விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT