தற்போதைய செய்திகள்

உசிலம்பட்டி: மேலும் 8 பேருக்கு கரோனா உறுதி

19th May 2020 08:53 PM

ADVERTISEMENT


மதுரை: உசிலம்பட்டியில் மும்பையிலிருந்து திரும்பியவர்களுள் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட செட்டியபட்டி கிராமத்திலுள்ள கிருஷ்ணா வேளாண் கல்லூரி, வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபா்களுக்கு தனிமைப்படுத்தப்படும் முகமாக ஏற்படுத்தப்பட்டு, அவா்களுக்கு அங்கு உரிய சிகிச்சை மற்றும் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையிலிருந்து வந்த 154 பேர் இந்த முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். முகாமில் இருந்த அனைவரும் பரிசோதிக்கபட்ட நிலையில் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரையும் 3 ஆம்புலன்ஸ்கள் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT