தற்போதைய செய்திகள்

கரோனா நிவாரணம்: ரூ. 12 லட்சம் வழங்கினார் திருவாவடுதுறை ஆதீன குருமகாசன்னிதானம்

20th Apr 2020 09:32 PM

ADVERTISEMENT


நாகப்பட்டினம்: திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24வது ஸ்ரீலஸ்ரீ குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக ரூ. 12 லட்சத்திற்கான காசோலையை மயிலாடுதுறை வருவாய்க் கோட்ட அலுவலர் வ. மகாராணியிடம் வழங்கினார்.

அவருடன் குத்தாலம் வட்டாட்சியர் ஜெ. ஜெனிட்டா மேரி, திருவாவடுதுறை கிராம நிர்வாக அலுவலர் எஸ். சுவாமிநாதன் மற்றும் ஆதீன தம்பிரான் சுவாமிகள், ஆதீன கண்காணிப்பாளர் சண்முகம், ஆதீன பொது மேலாளர் சுப்பிரமணியன் மற்றும் ஆதீன காசாளர் சுந்தரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT