சிறப்புச் செய்திகள்

கரோனாவுக்கு எதிராக இப்படி ஒரு மருந்து: ஒருநாள் நிச்சயம் வரலாம்!

28th Nov 2022 11:48 AM

ADVERTISEMENT

குயின்ஸ்லாந்தில் அமைந்துள்ள கிரிஃப்பித் பல்கலைக்கழகத்தில், நுண்ணுயிரியல் மற்றும் தொற்றுநோய் துறைத் தலைவர் லாரா ஹெர்ரெரோ தலைமையில் நடைபெற்று வரும் ஆராய்ச்சியானது, கரோனாவை ஒழிக்கும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்து தொடர்பானது.

மிகக் கொடூரமான உயிர்க்கொல்லியாக இருக்கும் கரோனாவை ஒழிப்பதற்கான மருந்தை நீங்கள் வீட்டுக்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தி குணமடையும் வகையிலான மருந்துகள் எங்களிடம் உள்ளன.

இதையும் படிக்க.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 2,076 பேர் பலி

ஆனால், அதிலும் மிகச் சிறப்பான மருந்து தொடர்பான ஆராய்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.

ADVERTISEMENT

அதாவது, உடலுக்குள் நுழைந்த முதல் படியிலேயே கரோனாவை ஒழிக்கும் வகையிலான மருந்தை அவர்கள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மூக்கில் உள்ள உயிரணுக்களை கரோனா வைரஸ்கள் தாக்குவதையே தடுத்து, அதன் மூலம் அவை உடலுக்குள் உள் நுழைவதையும் தடுக்கும் வகையில் நாசல் ஸ்ப்ரே எனப்படும் மூக்கில் தெளிக்கும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க.. ஊடகங்களுக்கு ஒரு தலைப்புச் செய்தியும் தரப்போவதில்லை: சொன்னது யார்?

மற்றொருபுறம், மூக்கில் அந்த மருந்தை தெளித்து, அதன் மூலம் மூக்குக்குள் நுழைந்த கரோனா வைரஸ் அங்கேயே அழிந்து, உடலுக்குள் செல்ல விடாமல் தடுக்கும் மருந்தும் ஆராய்ச்சியில் உள்ளது.

இப்போது அறிவியல் வளர்ச்சி எங்கே இருக்கிறது, அடுத்து நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை இங்கே விளக்கியிருக்கிறார்கள்.

கரோனா வைரஸை எப்படி தடுப்பது? அதனைத் தடுக்க உடலுக்குள் ஒரு தடுப்பு. அதாவது சார்ஸ்-கோவிட் வைரஸ் உடலுக்குள் நுழைவதைத் தடுக்கும் தடுப்பு.

வேறுமாதிரி சொல்வது என்றால், அதாவது, ஒரு பாதைக்குள் ஒரு வைரஸ் வருகிறது என்றால், அது மனித செல்களுக்குள் ஒட்டக் கூடாது, அல்லது அது மனிதர்களைத் தாக்கக் கூடாது.

நுரையீரலுக்குள் நுழைவதுதான் கரோனா வைரஸின் வேலை. எனவே, ஒரு உடலின் எந்த பாகத்துக்குள் இந்த வைரஸ் நுழைகிறதோ, அங்கே ஒரு தடுப்பை ஏற்படுத்துவதைத் தான் இந்த மருந்து செய்ய வேண்டும். எனவே, முதல் திட்டம் நாசல் ஸ்ப்ரே எனப்படும் மூக்கில் தெளிக்கும் மருந்துகள். மூக்கு வழியாக செலுத்தும் மருந்துகள்.

இதையும் படிக்க.. மகப்பேறு அறுவைச்சிகிச்சையில் வயிற்றுக்குள் மறந்துவிடப்பட்ட துண்டு

எனவே, இதனை அடிப்படையாக வைத்தே, உலகம் முழுவதும் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் பணியை பல குழுக்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. சில ஆராய்ச்சிகள் பரிசோதனைக் கூடத்தில் உள்ளன. சில ஆராய்ச்சிகள் மனிதர்களிடையே பரிசோதனை செய்யும் நிலையில் உள்ளன. ஆனால் எந்த ஆராய்ச்சியும் முடிந்து இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

ஹெபரின் என்ற மருந்து பல காலமாக இதயப் பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்தத்தை நீர்க்கச் செய்யும் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

ஆனால், எலிகளிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் மூக்கு வழியாக ஹெபரினை செலுத்தும்போது, அங்கே இருக்கும் உயிரணுக்களில் கரோனா வைரஸ் ஒட்டுவது தடுக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

ஹெபரின், வைரஸுடன் ஒட்டிக் கொண்டு, அது உயிரணுக்களுடன் ஒட்டமுடியாமல் செய்து, வைரஸ் உடலுக்குள் நுழைவதையும் தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பான ஆராய்ச்சியில் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இதுபோல, கோவிக்சில் - 5 (எத்தில் லாரோயில் அர்ஜினைன் ஹைட்ரோகுளோரைடு) என்ற மூக்கில் தெளிக்கும் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மூக்கினுள் உள்பரப்பையே மாற்றியமைத்து, கரோனா வைரஸ் உள்ளே நுழைவதையும், அதனுள் ஒட்டிக்கொள்வதையும் தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த மருந்து ஏற்கனவே பல தொற்றுநோய்க் கிருமிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட ஆராய்ச்சியிலும் இது நல்ல பலனைக் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுபோன்ற பல மூக்கு வழியாக செலுத்தும் மருந்துகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் இருந்துவருகின்றன. எனவே, எல்லா ஆராய்ச்சிகளும் நிச்சயம் ஒரு நல்ல பலனை நோக்கித்தான் செல்லும். 

ஒட்டுமொத்தமாக கரோனாவை செல்லும் ஆயுதமாக மாறாவிட்டாலும், பாதுகாப்பானதாக, பக்கவிளைவுகள் இல்லாததாக உறுதி செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் மூக்கு வழியாக செலுத்தும் மருந்துகள், நிச்சயம் கரோனாவுக்கு எதிரான மனிதகுலத்தின் போரில் ஒரு மிகச் சிறந்த கருவியாக மாறலாம் என்று கணிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT