சிறப்புச் செய்திகள்

கொல்லிமலைப் பகுதியில் பாரம்பரிய சிறுதானியம் கேழ்வரகு சாகுபடி

DIN


தம்மம்பட்டி: இந்தியாவின் பாரம்பரிய சிறுதானியப் பயிர்களில் ஒன்றான, கேழ்வரகு கொல்லிமலைப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில், தமிழ்நாடும், கர்நாடகாவும் கேழ்வரகு (ராகி) சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். ஆந்திரா, ஒரிசா, குஜராத், மகாராஷ்டிரா, உ.பி., இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் மலைப்பகுதிகளில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது. 

இந்தியாவில், முழு நீள, அகல நிலப்பரப்பில் இது பயிரிடப்படும் ஊடு பயிர்களில் மிக முக்கியமான சிறுதானியம் கேழ்வரகு ஆகும். இது, டிசம்பர் - ஜனவரி, செப்டம்பர் - அக்டோபர் மாதங்கள் பயிர் செய்ய ஏற்றவை ஆகும். 
தற்போது, கேழ்வரகு சாகுபடி ஏற்ற பருவகாலம் என்பதால்.  தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள மலைப்பகுதி கிராமங்களான அடுக்கம், வேலிக்காடு, கீரைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, அடுக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் கூறியதாவது, கேழ்வரகு ஏக்கருக்கு 250 - 300 கிலோ மகசூல் கிடைக்கும். உலர்ந்த கேழ்வரகை கதிரடித்து, புடைத்து, சுத்தப்படுத்திய பின் 100 கிலோ மூட்டை ரூ.4 ஆயிரத்துக்கு விற்போம்.

கேழ்வரகுடன் துவரை , உளுந்து உள்ளிட்ட பயறு வகைப் பயிர்களை 8:2 விகிதத்தில் ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம் அதிக மகசூலுடன், வருமானமும் கிடைக்கிறது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT