தற்போதைய செய்திகள்

சென்னை - சேலம் விமான சேவை மீண்டும் ரத்து

26th May 2021 01:56 PM

ADVERTISEMENT

சென்னை - சேலம் இடையே இயக்கப்பட்டு வந்த தனியார் விமான சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நிலையில், பயணிகளின் வருகை குறைவாக உள்ள காரணத்தினால் கடந்த மே 10ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து மே 23ஆம் தேதி முதல் இயங்கி வந்த விமான சேவை மீண்டும் மே 31 வரை ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT