தற்போதைய செய்திகள்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்

14th May 2021 02:29 PM

ADVERTISEMENT

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த இடைக்கால அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் இன்று தாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லை ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலியானார்கள்.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. 

இந்த ஆணைய அதிகாரி மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தார். 

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினிடம், விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை அருணா ஜெகதீசன் இன்று தாக்கல் செய்துள்ளார். 

இந்த அறிக்கையை தாக்கல் செய்யும் போது, முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உடனிருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT