தற்போதைய செய்திகள்

கோவிஷீல்ட் 2-ம் தவணை செலுத்த 12 வாரத்திற்கு குறைவாக வரவேண்டாம்: கர்நாடக அரசு

ANI

கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாவது தவணைக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரித்துள்ள நிலையில் கர்நாடகத்தில் 12 வாரத்திற்கு குறைவாக தடுப்பூசி போட வரவேண்டாம் என மாநில அரசு அறிவித்துள்ளது.

‘கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் தவணைக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கலாம். கா்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மாா்களும் எந்தவொரு கரோனா தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளலாம். சாா்ஸ் அல்லது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததலிருந்து 6 மாதங்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தவிா்க்க வேண்டும்’ என்று என்டிஏஜிஐ பரிந்துரை செய்தது.

என்டிஏஜிஐ சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட இந்தப் பரிந்துரையை தேசிய கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நிபுணா் குழு (என்இஜிவிஏசி) ஏற்று, அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து கர்நாடக அரசு இன்று வெளியிட்ட செய்தியில்,

கோவிஷீல்ட் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ள வருபவர்கள் முதல் தவணை செலுத்தி குறைந்தது 12 வாரத்திற்கு பிறகு மட்டுமே வரவேண்டும் என அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT