தற்போதைய செய்திகள்

மலை போல் சடலங்கள்; விடாமல் எரியும் தகனமேடைகள்!

எஸ். ரவிவர்மா

இவ்வுலகம் முழுவதும் உயிர் பிரிந்த உடலை நிலத்தில் புதைத்தோ, நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கியோ இல்லாமலாக்குவதுதான் வழக்கம். 

இவ்வாறு உடலை அழிப்பதற்கு முன்பாக பெரும்பாலான மதங்களில், அல்லது சாதிகளில் சடங்குகள் செய்து எரிப்பதோ, புதைப்பதோ காலம்காலமாக கடைப்பிடித்து வரும் வழிமுறையாக உள்ளது.

ஆனால், உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா பெருந்தொற்றால் சடங்கு சம்பரதாயம் அனைத்தும் நொறுங்கி போய்விட்டன.

கங்கையில் மிதக்கும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள்

உயிரிழந்தவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் நம்மிடையே கரோனாவால் உயிரிழந்த இரத்த சொந்தங்களின் சடலங்களை வாங்குவதற்குகூட மறுக்கும் அளவிற்கான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த ஒற்றை நோய்.

கரோனா முதல் அலையில் பெரிதும் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் சடலங்களை ஒன்றாக இட்டுப் புதைத்த காட்சி உலக நாடுகளையே உலுக்கியது.

தில்லி

தற்போது அந்த நிலை, உயிரிழந்த உடல்களுக்கு பெரிய அளவில் சடங்கு செய்து இறுதி ஊர்வலங்களை நடத்தும் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என மதங்களாலும் சாதிகளாலும், ஏழை, பணக்காரன் எனவும் பல பாகுபாடுகளை க் கொண்டு சமூகம் பல்வேறு விதமாக சிதறிக் கிடக்கின்றது.

இந்த நிலையில் கரோனா என்ற கொடுந்தொற்று இந்த வேறுபாடுகளை நொறுக்கி அனைவரையும் தாக்கிக் கொண்டுள்ளது. முதல் அலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தாக்கிய கரோனா, தற்போது பாரபட்சமின்றி அனைத்து வயதினரையும் தாக்கி வருகின்றது.

உத்தரப்பிரதேசம்

கரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2.37 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2.58 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள சுடுகாடுகள் நிரம்பி, சடலங்களை எரிக்க இடமில்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தில்லி

நாடு முழுவதும் தந்தை, தாய், உடன்பிறந்தோர், உறவுகள் என கரோனாவால் உயிரிழந்த உடல்களை சுடுகாடுகளுக்கு வெளியே வைத்துக்கொண்டு 10 மணி நேரத்திற்கும் மேலே எரியூட்ட காத்திருக்கின்றனர் அவர்களது உறவினர்கள்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுடுகாடுகளுக்கு வெளியே சடலத்தை தாங்கிய ஆம்புலன்ஸ்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நிற்பதால், ஒவ்வொரு உடலாக எரிக்க நேரமில்லாமல் அனைத்து சடலத்தையும் குவித்து எரிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர்

தில்லியில் தகன மேடைகளுக்குக் காத்திருக்கும் நிலையைத் தவிர்க்க, பிஞ்சு குழந்தைகள் விளையாடும் பூங்காக்கள் தற்காலிக தகன மேடைகளாக மாற்றப்பட்ட கொடுமை நாட்டையே பீதியடைய செய்துள்ளது.  

தில்லி பூங்காவை எரிமேடைகளாக மாற்றும் ஊழியர்கள்

கங்கையைப் புனித நதி என்ற நம்பிக்கைக்கு மத்தியில், உத்தரப் பிரதேசத்தில் எரிக்க "வசதி"ல்லாமல் செய்வதறியாது கங்கை ஆற்றில் 150-க்கும் மேற்பட்ட பிணங்களை விட்ட நிலையில் அவை அருகில் உள்ள மாநிலங்களில் கரை ஒதுங்கி அரசின் அலட்சியத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன. இந்த சம்பவம் மிகப்பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

வட மாநிலங்களில் ஏற்பட்ட இந்த அவலம் தற்போது தமிழகத்திலும் எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளது.

கங்கை கரையோரத்தில் ஒதுங்கிய சடலங்கள்

இதனாலோ என்னவோ, எந்த பணக்காரர்களும், எந்தவொரு சாதியைச் சேர்ந்தவர்களும் தங்கள் முறைப்படி சடங்கு செய்து எரிக்க வேண்டும் என வேண்டுகோள்கூட வைக்க முடியாத கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உலகமே பாராட்டி போற்றுபவன் ஆனாலும், கரோனாவால் இறந்தால் யாராலும் தீண்டக் கூட முடியாது என்கிற நிலை உருவாகியுள்ளது.

கர்நாடகம்

அதிகரித்துவரும் தொற்று பாதிப்புகளும், அதனால் ஏற்படும் இறப்புகளும் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அன்றாட வாழ்க்கையை நகர்த்த மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் கரோனா பேரிடர் அவர்களது வாழ்வில் மேலும் ஒரு பேரிடியாக இறங்கியுள்ளது. 

விரைந்து செயல்பட்டு மக்களின் உயிரைக் காப்பது மட்டுமல்ல, இறந்தால் மரியாதையாக அவர்களின் உடல்களை நல்லவிதமாக அடக்கம் செய்வதும் எரியூட்டுவதும்கூட அரசின் கடமைதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT