தற்போதைய செய்திகள்

அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

13th May 2021 12:14 PM

ADVERTISEMENT

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,

தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 4 நாள்களுக்கு கேரளம், தமிழகம், கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : அரபிக் கடல் காற்றழுத்த தாழ்வு பகுதி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT