தற்போதைய செய்திகள்

சட்டப்பேரவைத் தலைவர் தேர்தலில் அப்பாவு போட்டி: திமுக அறிவிப்பு

DIN

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தேர்தலில் திமுக சார்பில் அப்பாவு போட்டியிடுவார் என திமுக அறிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் இருந்து 1996, 2001, 2006 தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றவர் அப்பாவு. 2011. 2016 தேர்தல்களில் தோல்வி அடைந்தார். கடந்த 2016 தேர்தலில் மட்டும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது. 

இதன்பின்னர் 2021 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிக அனுபவம் கொண்ட மூத்த எம்எல்ஏவாக இருக்கிறார். 

முன்னதாக, பேரவைத் தலைவராக அப்பாவு முன்னிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகின. மேலும் தென்மாவட்டத்தில் இருந்து அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியும் மக்களிடம் இருந்தது. இந்நிலையில் பேரவைத் தலைவர் தேர்தலில் ஆளும் திமுக சார்பில் அப்பாவு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது

திமுகவிற்கு பேரவையில் பெரும்பான்மை இருப்பதால் அப்பாவு சட்டப்பேரவை தலைவராவது உறுதியாகியுள்ளது.

இன்று தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்ட கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டி, அவையின் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவித்துள்ளனர்.

1996-2001 காலத்தில் கருணாநிதி அமைச்சரவையில் தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தவர் கு.பிச்சாண்டி. நான்காவது முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT