தற்போதைய செய்திகள்

மேற்கு வங்க வன்முறை: மத்திய குழு ஆய்வு

7th May 2021 06:03 PM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து 4 பேர் கொண்ட மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானவுடன், பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். சில இடங்களில் பாஜக அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்ட விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. வன்முறையில் தங்கள் கட்சியைச் சோ்ந்த பல தொண்டா்கள் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. அதேபோல இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் திரிணமூல் தொண்டா்களால் தாக்கப்பட்டதாக அக்கட்சியினா் தெரிவித்தனா்.

மேலும், வன்முறையில் தாக்கப்பட்ட பாஜகவின் குடும்பத்தினரை சந்திக்க மேற்கு வங்கம் சென்ற மத்திய அமைச்சர் வி.முரளிதரன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் 4 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் இன்று ஆய்வு செய்தனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து அறிக்கை ஓரிரு நாள்களில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தாக்கல் செய்யப்படும் என தெரிகின்றது. 

Tags : west bengal violence
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT