தற்போதைய செய்திகள்

கரோனா 3-ம் அலையை சமாளிக்க தயாராகுங்கள்: உச்சநீதிமன்றம்

6th May 2021 02:15 PM

ADVERTISEMENT

கரோனா மூன்றாம் அலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் தயாராகுங்கள் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், மக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் இன்று கூறியது,

கரோனா மூன்றாம் அலை பெருமளவில் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறுவதால் அதை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் இப்போதே தயாராக இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

மூன்றாம் அலையை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT