தற்போதைய செய்திகள்

பேர்ஸ்டோவ், ஸ்டோக்ஸ் வானவேடிக்கை: இங்கிலாந்து அபார வெற்றி

26th Mar 2021 09:31 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே எல் ராகுல் 108 ரன்களும், ரிஷப் பண்ட் 77 ரன்கள் குவித்தனர்.

ADVERTISEMENT

இந்திய அணியின் பேட்டிங்: முழு செய்தி படிக்க கிளிக் செய்யவும்

இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் துவக்க வீரர்களாக களமிறங்கினார்கள்.

கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு அருமையான துவக்கத்தை இருவரும் அமைத்துக் கொடுத்தனர்.

இந்நிலையில், ஜேசன் ராய் அரைசதம் கடந்து 55 ரன்கள் எடுத்த நிலையில், ரோஹித் சர்மா ரன் அவுட் முறையில் வெளியேற்றினர்.

அதன்பின், பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ், இந்திய பந்துவீச்சார்களின் பந்துகளை சிதறடித்தார்கள். பெரும்பாலான பந்துகளை பவுண்டரி, சிக்ஸருக்கு பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார்கள்.

வெற்றிக்கு அருகில் செல்லும்போது, புவனேஷ்வர் வீசிய 35வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் 99 ரன்களுக்கு(10 சிக்ஸ், 4 பவுண்டரி) அவுட்டானார்.

அடுத்து கிருஷ்ணா வீசிய 36வது ஓவரில் பேர்ஸ்டோவ் 124(7 சிக்ஸ், 11 பவுண்டரி) ரன்களுக்கும், பட்லர் ரன் ஏதும் எடுக்காமலும் அதே ஓவரில் அவுட்டானார்கள்.

இறுதி கட்டத்தில் மலான் மற்றும் லிவிங்க்ஸ்டன் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.

இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 337 ரன்கள் குவித்தது. மலான் 17, லிவிங்க்ஸ்டன் 27 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி தொடரை 1-1 என சமம் செய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT