தற்போதைய செய்திகள்

குஜராத்தில் 2 ஆண்டுகளில் 313 சிங்கங்கள் பலி

5th Mar 2021 05:13 PM

ADVERTISEMENT

குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 313 சிங்கங்கள் பலியாகியுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஜுனாகர் மாவட்டத்தின் கிர் தேசிய பூங்கா ஆசிய சிங்கங்களின் இருப்பிடமாக உள்ளது.

இந்நிலையில் லாதி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த வனத்துறை அமைச்சர் கண்பத்சிங் வாசவா தெரிவித்ததாவது,

2019 ஜனவரி முதல் 2020 டிசம்பர் வரையிலான இரண்டு ஆண்டுகளில் குஜராத்தில் மொத்தம் 313 சிங்கங்கள் பலியாகியுள்ளது.

ADVERTISEMENT

அவற்றில், 69 ஆண் சிங்கங்கள் இயற்கையாகவும், இரண்டு இயற்கைக்கு மாறாகவும், 77 பெண் சிங்கங்கள் இயற்கை இயற்கையாகவும், 13 இயற்கைக்கு மாறாகவும் பலியாகியுள்ளது.

மேலும், 144 சிங்க குட்டிகள் இயற்கையாகவும், 8 இயற்கைக்கு மாறாகவும் பலியாகியுள்ளதாக தெரிவித்தார்.

சிங்கங்களின் கணக்கெடுப்பு 2020இன் படி, குஜராத்தில் 674 ஆசிய சிங்கங்கள் உள்ளது. இது 2015 கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 29 சதவீதம் அதிகமாகும். 

Tags : lion Gujarat
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT