தற்போதைய செய்திகள்

5 மாநில தேர்தல்: மோடி, அமித்ஷா ஆலோசனை

DIN

5 மாநிலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தில்லியில் பாஜக மத்திய தேர்தல் குழுக் கூட்டத்துடன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தில்லியில் நடைபெற்று  வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் பாஜக தேர்தல் பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கூட்டத்தில் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT