தற்போதைய செய்திகள்

மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்:13 நாள்களில் ரூ.1.16 கோடி வசூல்

3rd Mar 2021 05:48 PM

ADVERTISEMENT

மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 13 நாள்களில் ரூ. 1.16 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதி முதல் நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவியது. நாட்டில் அதிகபட்சமாக மும்பையில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனை குறைக்கும் வகையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், முகக்கவசம் அணியாத 58,000 பேரிடமிருந்து கடந்த 13 நாள்களில் அபராதமாக ரூ. 1.16 கோடி காவல்துறை சார்பில் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Tags : facemask mumbai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT