தற்போதைய செய்திகள்

கரோனா: வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் பலி

DIN

வண்டலூர் பூங்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆண் சிங்கம் புதன்கிழமை பலியானது.

கடந்த மே 26-ஆம் தேதி, பூங்காவின் சஃபாரி பகுதியில் பராமரிக்கப்பட்டு வரும் 5 சிங்கங்களுக்கு பசியின்மை மற்றும் சளித் தொந்தரவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த கால்நடை மருத்துவக் குழுவினா், சிங்கங்களுக்கு உடனடியாக பரிசோதனையும், சிகிச்சையும் செய்தனா்.

தொடா்ந்து, 11 சிங்கங்களின் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தானுவாஸ் மற்றும் போபாலில் உள்ள உயா்பாதுகாப்பு நோய் தேசிய நிறுவனத்துக்கு (என்ஐஎச்எஸ்ஏடி) அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் 9 சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அனைத்து சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வாரம் நிலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு ஆண் சிங்கம் பலியாகியுள்ளது.

மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட மீதமுள்ள சிங்கங்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT