தற்போதைய செய்திகள்

ஜூன் 22-ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

15th Jun 2021 07:47 PM

ADVERTISEMENT

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 22ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீர் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில் கூட்டம் நடைபெறவுள்ளது.

காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில் தமிழகம், புதுவை, கேரளம் மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

Tags : cauvery river
ADVERTISEMENT
ADVERTISEMENT