தற்போதைய செய்திகள்

பொது முடக்கம் நீட்டிக்க வாய்ப்பு: கூடுதலாக சில தளர்வுகள்

DIN

தமிழகத்தில் கூடுதலாக சில தளர்வுகளுடன் பொது முடக்கத்தை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கலாம் என  முதல்வர் ஸ்டாலின் இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தெரிகின்றது.

கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருந்ததன் காரணமாக கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற உயர் அதிகாரிகள், தமிழகத்தில் கரோனா குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள் அளித்து ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டிக்கலாம் என பரிந்துரைத்துள்ளனர். மேலும், கரோனா குறைவாக உள்ள மாவட்டங்களில் உள்ள மதுபானக் கடைகளை டோக்கன் முறையில் திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

பொதுமுடக்கம் தளர்வுகள் மற்றும் நீட்டிப்பு குறித்த அறிவிப்பை நாளை முதல்வர் வெளியிடுவார் என தெரிகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT