தற்போதைய செய்திகள்

டிக்டாக் உள்பட 59 செயலிகளுக்கு நிரந்தரத் தடை

DIN

சீனாவின் டிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு கடந்த ஆண்டு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது நிரந்தரத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம், சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதையடுத்து, அந்த செயலிகளின் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு நிறுவனங்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாத காரணத்தால், அந்த செயலிகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவுடனான எல்லை மோதலுக்கு பிறகு கடந்த ஆண்டு டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கான அனுமதி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்த செயலிகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளன என்ற நம்பகமான தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

கிளப் ஃபேக்டரி, ஷேர்இட், லைக், வெய்போ, பைடு, பிகோ லைவ், வி சாட் ஆகிய சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

முட்டை விலை நிலவரம்

SCROLL FOR NEXT