தற்போதைய செய்திகள்

கூடலூரில் கவனயீர்ப்பு பேரணி: காவலர்களுடன் விவசாயிகள் வாக்குவாதம்

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் லோயர் கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்தை கைவிடக் கோரியும் மாற்றுத் திட்டத்தை அறிவிக்க கோரியும் கவனயீர்ப்பு பேரணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. அப்போது காவலர்களுக்கும் விவசாயிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தேனி மாவட்டம் கூடலூரில் அனைத்து சமுதாய பொதுமக்கள் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் திங்கட்கிழமை கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.

லோயர் கேம்ப் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை கைவிடக் கோரி மாற்று திட்டமான வைகை அணையில் தூர்வாரவும், அல்லது ராமநாதபுரம் தொண்டியிலிருந்து இருந்து கடல் நீரை குடிநீராக்கி மதுரைக்கு வழங்கும்  திட்டத்தை அமல்படுத்த கோரியும் பேரணி நடைபெற்றது.

விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவரும் வழக்கறிஞர் சங்க மாவட்ட தலைவருமனஎம் கே எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியை தொடங்கி வைத்தார்.

பேரணியில் ஆண்-பெண் பொதுமக்கள், விவசாயிகள், அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் லோயர் கேம்ப் மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு மாற்று திட்டத்தை அறிவிக்க கோஷமிட்டனர்.

பின்னர் பேரணி, கூடலூர் குமுளி சாலையில் உள்ள கூலிக்காரன் பாலத்தில் முடிவடைந்தது. மாற்று திட்டத்தை அறிவிக்கும் வரை தொடர் உண்ணாவிரதம், கடையடைப்பு போன்ற போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக பேரணி துவங்குவதற்கு முன்பு கூடலூர் காவல் ஆய்வாளர் முத்துமணி விவசாயிகளிடம் பேரணியை தொடங்குமாறு கேட்டார், அப்போது கூட்டமைப்பு தலைவரும், வழக்குறைஞருமான எம்.கே.எம். முத்துராமலிங்கத்திற்கும் காவல் ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, இதனால் விவசாயிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு  சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். பின்னர் பேரணி தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

SCROLL FOR NEXT