தற்போதைய செய்திகள்

வேளாண் சட்டங்கள்: 11ஆம் கட்டப் பேச்சு தோல்வி

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

இதனையடுத்து வரும் ஜனவரி 22-ஆம் தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே நடைபெற்ற 10 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த சமரச முடிவும் எட்டப்படாத நிலையில், இன்று (ஜன. 22) 11-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

காலை தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், மத்திய அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தில்லி விஞ்ஞான் பவனில் சுமார் 4 மணி நேரமாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியிருந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளாததால் விவசாய சட்டங்கள் தொடர்பான பிரச்னையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

மேலும் திட்டமிட்டபடி குடியரசு தினத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பங்கேற்கும் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாய சங்கப் பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT