தற்போதைய செய்திகள்

நாட்டில் 6.31 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை

ANI

நாட்டில் கடந்த 4 நாள்களில் 6.31 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கின. முதல் 3 நாள்களில் நாடு முழுவதும் 3,72,567 லட்சம் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நான்காவது நாள் மாலை 6 மணிவரை நிலவரப்படி 2,58,850 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

நாட்டில் இதுவரை மொத்தம் 6,31,417 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஏழு மாதங்களுக்கு பிறகு கரோனாவால் சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 2 லட்சமாக குறைந்துள்ளது. 8 மாதங்களுக்கு பிறகு பலியானோரின் எண்ணிக்கை 140ஆக குறைந்துள்ளது.

மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு 50 ஆயிரத்திற்கு அதிகமாக நோயாளிகள் கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்தில் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

SCROLL FOR NEXT