தற்போதைய செய்திகள்

தில்லி சென்றடைந்தார் முதல்வர் பழனிசாமி

DIN

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இரண்டு நாள்கள் பயணமாக தில்லி சென்றடைந்தார்.

பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி 2 நாள்கள் பயணமாக தில்லிக்கு திங்கள்கிழமை சென்றுள்ளார்.

உள்துறை அமைச்சா் அமித் ஷாவை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு அவரது இல்லத்தில் சந்திக்கிறாா்.

பின், செவ்வாய்க்கிழமை காலை பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து பேசவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, தமிழக அரசின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமருக்கு அழைப்பு விடுக்க உள்ளாா்.

தில்லி சென்ற முதல்வருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தமிழக அரசின் தில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரமும் சென்றுள்ளனர்.

மேலும், தமிழக சட்டப்பேரவைக்கான கூட்டணி குறித்தும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வரின் தில்லி பயணம் அரசு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT