தற்போதைய செய்திகள்

கரோனா: உத்தரகண்டில் அனைத்து அலுவலகங்களும் 3 நாள்கள் மூட உத்தரவு

22nd Apr 2021 06:15 PM

ADVERTISEMENT

கரோனா அதிகரித்து வருவதால் உத்தரகண்டில் உள்ள அனைத்து அலுவலகங்களையும் மூன்று நாள்கள் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் உத்தரகண்டில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

அந்தவகையில் உத்தரகண்ட் அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

ADVERTISEMENT

கரோனா அதிகரித்து வருவதால் உத்தரகண்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும் ஏப்ரல் 24 முதல் 26 வரை மூடவேண்டும். இதிலிருந்து அத்தியாவசிய பணிகள் செய்யும் அலுவலகங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளன.

Tags : uttarakhand corona restrictions
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT