தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் பொதுமுடக்கம்? இரவு 8.30 மணிக்கு முதல்வர் உரை

13th Apr 2021 05:42 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ள நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே மாநில மக்களிடையே உரையாற்றவுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நாளொன்றுக்கு 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, கரோனா தொற்றை இரவு நேர பொதுமுடக்கம் மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், தொற்றின் பரவல் குறையவில்லை.

இதனிடையே, மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில், எதிர்க்கட்சித் தலைவரும் கலந்து கொண்டார்.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று இரவு 8.30 மணியளவில் முதல்வர் உத்தவ் தாக்கரே, மக்களிடம் உரையாற்றப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த உரையின்போது, மீண்டும் பொதுமுடக்கம் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

Tags : maharastra Lock Down Curfew
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT