தற்போதைய செய்திகள்

கரோனா அச்சுறுத்தல்: பிகாருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்

13th Apr 2021 07:32 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று திடீரென அதிகரித்ததையடுத்து, பிற மாநிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த பிகார் மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதித்து வருகின்றனர். 

அதன்படி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் முழு பொதுமுடக்கம் விதிக்கும் அபயம் எழுந்துள்ளது. 

இதையடுத்து மகாராஷ்டிரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த பிகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

ADVERTISEMENT

அவ்வாறு மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திரும்பும் பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

Tags : Corona Test Bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT