தற்போதைய செய்திகள்

நேபாளத்தில் இருந்து இந்தியா திரும்பிய 40 ஆயிரம் தொழிலாளர்கள்

30th Sep 2020 07:53 PM

ADVERTISEMENT

கரோனா பொது முடக்கத்தால் வேலை இழந்த இந்தியாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 40 ஆயிரம் பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து நேபாள எல்லைக் காவல்துறை அதிகாரி பிஷ்னு கிரி கூறுகையில்,

கரோனா பொதுமுடக்கத்தால் வேலை இழந்த இந்திய தொழிலாளர்கள் நேபாள்குஞ்ச் இதுவரை 40 ஆயிரம் பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவிற்கு வேலைக்காக புலம்பெயர்ந்து சென்ற நேபாள மக்கள் 76,048 பேர் இதுவரை நேபாளத்திற்கு திரும்பியுள்ளனர்.

ADVERTISEMENT

இதில், கடந்த 4 வாரங்களில் மட்டும் 22 ஆயிரம் பேர் அடையாள அட்டை காண்பித்து, நாடு திரும்பியாதாக தெரிவித்தார். 

இந்திய-நேபாள எல்லையைக் கடந்து செல்ல, பரிந்துரை கடிதம் மற்றும் அவர்களின் அடையாள அட்டையைக் காட்டினால் கடக்க முடியும் என கூறினார்.

பெரும்பாலும் நேபாளத்தில் இருந்து டாங், பாங்கே, பார்தியா, ஜாஜர்கோட், சுர்கேத், டெயிலேக், ஜும்லா, சல்யான், ருகும், காளிகோட் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக இந்தியாவுக்கு குடிபெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
 

Tags : migrant workers
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT