தற்போதைய செய்திகள்

கேரளத்தில் அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி : 2 சிசுக்கள் பலி

28th Sep 2020 04:00 PM

ADVERTISEMENT

கேரளத்தில் சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த 2 சிசுக்கள் பலியானதையடுத்து, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

கேரள மாநிலம் கிசிசெரி பகுதியைச் சேர்ந்தவர் சஹாலா. கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் இருந்த போதிலும், பிரசவ வலி ஏற்பட்டு 14 மணிநேரம் 6 மருத்துவமனைகளுக்கு சென்றும் அனுமதிக்க மறுப்பு தெரிவித்ததால் சிசுக்கள் சஹாலாவின் வயிற்றிலேயே பலியானது. 

சஹாலாவின் கணவர் ஷரீஃப் கூறுகையில், பிரசவ வலி ஏற்பட்டவுடன் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இருப்பினும், அது கரோனா சிறப்பு மருத்துவமனை என அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.

ஆனால் முன்னதாக, சஹாலா கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு செப்டம்பர் 19 வரை 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டார்.

ADVERTISEMENT

இருப்பினும், செப்டம்பர் 15 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் இவருக்கு தொற்று இல்லை என்று உறுதியானது.

அவரது தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பின்னர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தினர்.

அதனால், வெள்ளிக்கிழமை கடுமையான பிரசவ வலி இருந்ததால், என் மனைவியை மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு மறுத்ததால் எடவண்ணா ஈ.எம்.சி மருத்துவமனைக்குச் சென்றோம்.

அங்கும் அனுமதிக்க மறுத்ததால், கோழிக்கோட்டில் உள்ள இக்ரா மருத்துவமனைக்குச் சென்றோம், ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் நாங்கள் அவரை கோழிக்கோட்டையில் உள்ள கோட்டபரம்பா பெண்கள் மற்றும் குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர்கள் திங்கள்கிழமை வரச்சொல்லி திருப்பி அனுப்பினார்கள்.

இதன்பின், சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வலி அதிகமானதால் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவர்களிடம் 30 நிமிடங்கள் முறையிட்ட பின்னர் பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும், காலை 8 மணியளவில் 2 சிசுக்களும் இறந்து பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின், சஹாலா மேற்சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறினார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா உத்தரவிட்டுள்ளார்.

Tags : kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT