தற்போதைய செய்திகள்

எஸ்.பி.பிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க ஜெகன் கோரிக்கை

DIN

எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

பிரபல இந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: 

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்த எஸ்.பி.பி. க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்திய திரையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி பாடகராக இருந்தார். 

அவரது திரையுலக வாழ்கையில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்து உள்பட பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடலகளை பாடியுள்ளார். இந்திய அரசின் சிவிலியன் விருதான பத்மஸ்ரீ (2001) மற்றும் பத்மாபூஷன் (2011) ஆகிய விருதுகள் உள்பட பல மத்திய மற்றும் மாநில அரசுகளின் விருதுகள், திரையுலகின் முக்கிய விருதுகள் பெற்றுள்ளார்.

திரையுலகில் 50 ஆண்டுகளாக எஸ்.பி.பி. ஆற்றிய பணிக்கு லதா மங்கேஷ்கர், சுப்புலட்சுமி பூபன் ஹசாரிகா, பீம்சென் ஜோஷி போன்றோர்களுக்கு வழங்கப்பட்டதை போல் இந்திய உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கவேண்டும் என கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT