தற்போதைய செய்திகள்

சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

25th Sep 2020 11:08 PM

ADVERTISEMENT

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் தில்லி அணி சென்னை அணியை 44 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

தில்லி அணியில் முதலில் களமிறங்கிய பிருத்வி ஷா, தவான் ஜோடி நிதாமான தொடக்கம் தந்தது. இந்நிலையில் பிருத்வி ஷா (64), தவான் (35) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின் களமிறங்கிய தில்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 26 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பந்த் (37) மற்றும் மார்கஸ் ஸ்டாய்னில் (5) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் தில்லி அணி 175 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதன்மூலம் சென்னை அணியின் வெற்றிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் (10), வாட்சன் (14) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின் களமிறங்கிய டூ பிளசிஸ் சற்று நிதானமாக விளையாடினார். இந்நிலையில் ருத்துராஜ் 5 ரன்னில் ரன் அவுட்டானார். சற்று அதிரடியாக ஆடிய ஜாதவ் 26 ரன்னில் வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து டூபிளசிஸுடன் இணைந்த தோனி அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர்.
சற்று நிலைத்து ஆடிய பிளசிஸ் 43 ரன்களிலும் தோனி 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.  இறுதி பந்தில் ஜடேஜா 12 ரன்களில் ஆட்டமிழக்க, சாம் (1) ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் சென்னை அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி அணி வீழ்த்தியது. 

Tags : IPL 2020
ADVERTISEMENT
ADVERTISEMENT