தற்போதைய செய்திகள்

மும்பை வெள்ளத்தில் சிக்கி 2 காவலர்கள் உயிரிழப்பு

23rd Sep 2020 05:46 PM

ADVERTISEMENT

மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மின்தூக்கியில் சிக்கிய 2 காவலர்கள் வெள்ள நீரில் ழூழ்கி புதன்கிழமை உயிரிழந்தனர்.

தெற்கு மும்பையின் அக்ரிபாடா பகுதியில் உள்ள நதானி குடியிருப்பில்   ஜமீர் அகமது சோஹனன் (32) மற்றும் ஷெஜாத் எஸ் மேமன் என்ற இரண்டு காவலர்களும் தண்ணீர் திறப்பதற்காக காலை 8 மணியளவில் கீழ் தளத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது மும்பையில் பெய்த மழையால் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதிலிருந்து, மேலே வருவதற்காக மின் தூக்கியில் ஏறியுள்ளனர். மின்தூக்கி முழுவதும் நீர் இருந்ததால் அவர்களால் அதை இயக்க முடியவில்லை.

இந்நிலையில் வெளியேற முயன்ற அவர்கள், வெளியேற முடியாமல் எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளனர். ஆனால் குடியிருப்பு வாசிகள் வருவதற்குள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

இதையடுத்து, தீயணைப்பு படையினருக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து மின்தூக்கியின் கதவை உடைத்து உடல்களை மீட்டனர்.

மும்பை மாநகரம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : mumbai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT