தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் 550 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

23rd Sep 2020 04:38 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் 550க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளித்தார் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா.

ஜம்மு-காஷ்மீர் காவல் துறையில் 2007ல் இருந்து நிலுவையில் இருந்த 550 க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகளுக்கு தற்போது காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் பதவி உயர்விற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மனோஜ் சின்ஹா, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கையாண்டு, ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலனுக்காக போராடுபவர்கள் எங்கள் காவல் படையினர், அவர்களின் பணி உயர்வு குறித்த பொறுப்பு எங்களுடையது என கூறினார்.

Tags : Manoj Sinha
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT