தற்போதைய செய்திகள்

உ.பி.யில் பேருந்து விபத்து : 2 பேர் பலி, 10 பேர் காயம்

22nd Sep 2020 03:50 PM

ADVERTISEMENT

உத்தரபிரதேசத்தின் ராம்சனேஹி காட் பகுதியில் செவ்வாய்க்கிழமை வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

பிகாரில் இருந்து பஞ்சாபிற்கு தொழிலாளர்களை ஏற்றி வந்த டெம்போ வேன் அயோத்தி-லக்னோ நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணியளவில் ஒரு உணவகத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், அயோத்தியில் இருந்து வந்த பேருந்து வேனின் பின் பகுதியில் மோதியது. இதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், அம்ரி தேவி மற்றும் ஜோகி பிண்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

Tags : UP
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT