தற்போதைய செய்திகள்

கிருஷ்ணா நதி நீரை முழுமையாக சேமித்து வைப்பதில் சிக்கல்

DIN

கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீரை பூண்டி கால்வாய் சேதம் அடைந்திருப்பதால் முழுமையாக சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது.  ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும்  சென்னை குடிநீருக்காக வழங்க வேண்டும் என்பது தமிழக ஆந்திர அரசுகளின் இடையே போடப்பட்ட ஒப்பந்தம்.

ஆனால் பொதுப்பணித் துறை வரலாற்றில் இதுவரை முழுமையாக 12 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்தபாடில்லை. ஒருபுறம் சேதமடைந்த கால்வாய்கள். மறுபுறம் அந்த தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை.

இந்த பருவத்திற்கான தண்ணீரை ஆந்திர அரசு கடந்த 18ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி என்ற வீதத்தில் திறந்துவிட்டது. அது ஞாயிறு இரவு தமிழக எல்லைப் பகுதியான ஜீரொ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அங்கிருந்து பூண்டிக்கு இந்த தண்ணீர் அனுப்பப்பட்டு அங்கு சேமிக்கப்படுகிறது.

தமிழக எல்லைப் பகுதியான ஜீரொ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை செல்லும் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கால்வாய் வழியாக தான் இந்த கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்கு செல்லும். அந்த வகையில் போந்தவாக்கம், கலவை, சிட்லபாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் முழுவதுமாக உடைந்து போயுள்ளது.

இதனால் ஆந்திராவில் இருந்து வரும் தண்ணீரை முழுமையாக பூண்டி ஏரியில் சேமித்து வைக்க முடியவில்லை. 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 500 கனஅடி மட்டுமே செல்கிறது. உடைந்த கால்வாய்களில் முழுமையாக சீரமைக்க முடியாததால் குறைவான தண்ணீரே வருகிறது.

இதனை தண்ணீர் வருவதற்கு முன்பே முறையாக கால்வாயை பராமரித்து இருந்தால் முழுமையான தண்ணீரை பூண்டி ஏரியில் சேமித்து வைக்க முடியும். இதே நிலைமையில் சென்றால் பூண்டி ஏரியில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவை என்பது பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT