தற்போதைய செய்திகள்

ரஃபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் விமானி

PTI

இந்திய விமானப்படையின் பெண் போர் விமானி ஒருவர் விரையில் ரஃபேல் விமானத்தை இயக்க உள்ளதாக திங்கள்கிழமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்தப் பெண் விமானி மிக் -21 ரக போர் விமானத்தை இயக்கி வருகிறார். மேலும் ரஃபேல் ஜெட் விமானங்களை இயக்கும் அம்பாலாவின் கோல்டன் அரோஸ் படைப்பிரிவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடுமையான தேர்வு செயல்முறையைத் தொடர்ந்து ரஃபேல் ஜெட் விமானங்களை இயக்க அவர் தேர்வு செய்யப்பட்டார். தற்போது அதற்கான பயிற்சியில் உள்ளதாக தெரிவித்தார்.

முதன்முதலாக, கடந்த 2018ம் ஆண்டு பறக்கும் அதிகாரி அவானி சதுர்வேதி மிக் -21 பைசன் ரக போர் விமானத்தை தனியாக இயக்கி முதல் இந்திய பெண்மணி என்ற வரலாற்றைப் படைத்தார்.

மேலும், சதுர்வேதி கடந்த ஜூலை 2016ல் போர் விமானத்தின் விமானியாக நியமிக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர். தற்போது விமானப்படையில் 10 பெண் போர் விமானிகள் மற்றும் 18 பெண் நேவிகேட்டர்கள் உள்பட 1,875 பேர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT