தற்போதைய செய்திகள்

நாமக்கல்லில் இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலனுக்கு சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி

30th Oct 2020 07:38 PM

ADVERTISEMENT

நாமக்கல்: மறைந்த இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலனுக்கு நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் பங்கேற்று இராம.கோபாலன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி வளர்ச்சிக்கும், இந்து மக்களுக்காகவும் இராம.கோபாலன்  பாடுபட்டது குறித்தும் அவரது நினைவுகள் பற்றியும் மாநிலத் தலைவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில செயலாளர் சி.எம். அண்ணாதுரை, நாமக்கல் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் அய்யாவு, நாமக்கல் மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

Tags : namakkal
ADVERTISEMENT
ADVERTISEMENT