தற்போதைய செய்திகள்

‘பயங்கரவாதத்தை பாக். ஆதரிப்பதை மறைக்க முடியாது’ : இந்திய வெளியுறவுத்துறை

29th Oct 2020 07:43 PM

ADVERTISEMENT

பயங்கிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வரும் உண்மையை மறைக்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்தியில்,

பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருவதில் பாகிஸ்தானின் பங்கு என்ன என்பது உலகிற்கு தெரியும். பயங்கிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வரும் உண்மையை மறைக்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, வியாழக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் செளத்ரி பேசியபோது, புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளதாகவும், தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதில், பாகிஸ்தான் அரசிற்கு பங்கு இருப்பதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

ADVERTISEMENT

பாகிஸ்தான் அமைச்சரின் இந்த கருத்து இருநாட்டு அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் இந்திய வெளியுறவுத்துறை தரப்பில் கருத்து தெரிவித்துள்ளது.

Tags : pulwama
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT