தற்போதைய செய்திகள்

கர்நாடக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ரவீந்திரநாத் ராஜிநாமா

PTI

கர்நாடக மாநிலத்தின் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ரவீந்திரநாத், சிலர் மறைமுகமாக துன்புறுத்துவதாக குற்றம் சாட்டி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

கர்நாடக வனத்துறை கூடுதல் காவல் தலைவராக பணியாற்றி வந்தவர் டாக்டர் பி.ரவீந்திரநாத். சமீபத்தில் இரண்டு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், ரவீந்திரநாத்திற்கு வழங்கப்படவில்லை. 

இந்நிலையில், அக்டோபர் 28ஆம் தேதி மாநில தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய் பாஸ்கர் முன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

தனது ராஜிநாமா கடிதத்தில், நான் கர்நாடக மக்களுக்கு உண்மையாக சேவை செய்தேன், இதற்கிடையில் கடந்த 4 ஆண்டுகளாக ஒருசிலர் உருவாக்கிய பிரச்னைகளை எதிர்கொண்டேன்.

தற்போது மறைமுக துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன், அமைதியான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்காக பதவியை ராஜிநாமா செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஓட்டல் ஒன்றில் ஒரு பெண்ணை புகைப்படம் எடுத்த சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT